பொன்னான வாக்கு – 23

கிருஷ்ண பட்சத்துக்கு ஒன்று, சுக்ல பட்சத்துக்கு ஒன்று என்று இப்போதெல்லாம் கோடம்பாக்கத்தில்கூட முற்றிலும் புது முகங்களைப் போட்டுப் படமெடுக்க ஆள் வந்துவிட்ட நிலையில் அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் உள்ள புது முகங்களின் எண்ணிக்கை எனக்குப் பெரிய அதிர்ச்சியளிக்கவில்லை. ஐந்து முழு வருஷங்கள் அமைச்சராக இருந்தவர்களிலேயே முக்கால்வாசிப் பேர் இன்னும் புது முகங்களாகத்தான் காட்சியளிக்கிறார்கள். எங்கே, தில் இருந்தால் அறம் செய விரும்பு ஸ்பீடில் அதிமுக அமைச்சர்கள் பெயர்களை ஒப்பியுங்கள் பார்க்கலாம்? வேட்பாளர் பட்டியலில் தற்போதைய அமைச்சர்கள் பலபேர் … Continue reading பொன்னான வாக்கு – 23